Posts

Showing posts from December, 2021

கடல் அறிவியல் படிப்புகள்...!

Image
கடல் அறிவியல் படிப்புகள்...! Marine science courses ...! BZ.Marine science, கடல் அறிவியல் படிப்புகள்...! ◆ வித்தியாசமான சூழலில் பணியிடம் அமைவது பலருக்கும் வித்தியாசமான அனுபவத் தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரக்கூடியது. கடல் அறிவியல், கடல் தொழில்நுட்ப பொறியியல், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது அறிவியல், கடல் வணிக மேலாண்மை அறிவியல், கடல் தொழில்நுட்ப மேலாண்மையியல் என பல்வேறு படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் கடல்சார் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன. ◆ சென்னை, மும்பை, கொல்கத்தா, கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் உள்ள கடல்சார் பல் கலைக்கழகங்களில் இந்த படிப்புகளை படிக்க முடியும். ◆ இந்த படிப்புகளில் சேர காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் எனப்படும் சி.இ.டி. நுழைவுத் தேர்வு கடல்சார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.  ◆ இதில் தேர்ச்சி பெறுபவர்கள், இந்த பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் விரும்பிய படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். ◆ இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் 1-8-2021-ந் தேதியில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  ◆ திரு மணம் ஆகாதவராக இரு...